Connect with us

வினாத்தாள் கசிந்த விவகாரம் : 2 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்!!

paper leak 1614514609116 1614514612479

தமிழகம்

வினாத்தாள் கசிந்த விவகாரம் : 2 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்!!

வினாத்தாள் கசிந்த விவகாரம் : 2 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்!!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பொதுத் தேர்வுக்கு தயாராகும் வகையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 9ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் பொதுத்தேர்வுகள் போல் நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் 10- ஆம் வகுப்பு அறிவியல் பாட வினாத்தாளும் மற்றும் 12- ஆம் வகுப்பு கணித பாட வினாத்தாளும் தேர்வு நடைபெறுவதற்கு முன்னரே சோசியல் மீடியாவில் வெளியானது.

இதனையடுத்து அடுத்தடுத்து வினாத்தாள்கள் வெளியானதால் சர்ச்சையை ஏற்படுத்தியது . இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் பொன்குமார் விசாரணை நடத்தியதில் 2- பள்ளிகள் விதிமுறைகளை மீறி வினாத்தாள்களை கசிய விட்டது தெரியவந்தது.

இதனால் இரண்டு பள்ளிகளுக்கும் விளக்கம் கேட்டு மாவட்ட கல்வி இயக்குனர் விஷ்ணுபிரியா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த விவகாரத்தில் இருந்து தனியார் பள்ளிகளுக்கும் 7 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கல்வித்துறை மற்றும் அரசு தேர்வுத் துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதால் அந்த பள்ளிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு மாவட்ட கல்வி இயக்குனர் விஷ்ணுபிரியா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top