Connect with us

வினாத்தாள்கள் கசிந்த விவகாரம்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

education department

Tamil Nadu

வினாத்தாள்கள் கசிந்த விவகாரம்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

வினாத்தாள்கள் கசிந்த விவகாரம்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

10,11,12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு திருப்புதல் தேர்வுகளை   நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் நடைபெற்ற திருப்புதல் தேர்வில் தேர்வுக்கு முன்னரே வினாத்தாள்கள் இணையதளத்தில் கசிந்தன. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வினாத்தாள் வெளியானது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இரண்டு பள்ளிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து நோட்டிஸ் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து இரண்டாம் திருப்புதல் தேர்வில் வினாத்தாள் கசிந்ததால் பெரும் சர்ச்சை ஏற்ப்படுத்தியது. இதனால் 10,11,12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடப்பட்டது.

இந்த சூழலில் 10,11,12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 முதல் 35 சதவீதம் பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளது. எனவே குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ் பொதுத்தேர்வு கேள்விகள் இடம்பெறும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top