Connect with us

வினாத்தாள் கசிந்த விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி !!

question paper

தமிழகம்

வினாத்தாள் கசிந்த விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி !!

வினாத்தாள் கசிந்த விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி !!

12- ம் வகுப்பு இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு கணித பாட வினாத்தாள் முன்கூட்டியே வெளியான நிலையில் மாற்று கேள்வித்தாள் கொண்டு தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

12- ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 28- ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அட்டவணை படி இன்று கணித தேர்வுகள் நடைபெறும் நிலையில் அந்த பாடத்திற்கான வினாத்தாள் முன்கூட்டியே சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வினாத்தாள் எங்கிருந்து எப்படி வெளியானது என்பது பற்றிய விவரங்கள் தெரியவரவில்லை. இந்த சூழலில் மாற்று வினாத்தாள் கொண்டு தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு முதல் கட்ட திருப்புதல் தேர்வு நடைபெற்ற போது தேர்வுக்கு முதல் நாளே அந்தந்த தேர்வுக்குரிய வினாத்தாள்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வந்தன.

இந்த விவகாரம் தொடர்பாக  திருவண்ணாமலையில் இரண்டு பள்ளிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இதுபோன்ற தவறுகள் மேலும் நடைபெறாது என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top