Connect with us

இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவு: வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது!!

elizabeth

செய்திகள்

இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவு: வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது!!

இங்கிலாந்து  மகாராணி எலிசபெத்  காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தில் 96 வயதான ராணி எலிசபெத்தின் உடல்நிலை வயது முதிர்வின் காரணமாக அவ்வபோது உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2  தினங்களாக அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வந்தனர். அதே சமயம், அவருடைய நெருங்கிய உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு இருந்ததாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்து இருந்தனர்.

இதனிடையே  மகாராணி எலிசபெத்  உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். இவரது மறைவிற்கு உலகம் முழுவதும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ராணியின் மறைவிற்கு 10-12 நாட்கள் இரங்கல் தினமாக கொண்டாடப்படும்  நிலையில் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top