செருப்பு தைக்கும் கடையில் QR Code: மூலை முடுக்கெல்லாம் பரவிய டிஜிட்டல்!

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா டிஜிட்டல் இந்தியாவாக மாறி வருகிறது என்பதும் குறிப்பாக க்யூ ஆர் கோடு பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்வது அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி பிளாட்பாரத்தில் கடை வைத்திருக்கும் நிலையில் அவரும் க்யூ ஆர் கோடு கொண்ட ஒரு அட்டையை வைத்து இருக்கிறார். இது குறித்த வீடியோ புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாட்பாரத்தில் வியாபாரம் செய்யும் தள்ளுவண்டி வாழைப்பழ கடைகாரர்கள் பலர் இந்த க்யூ ஆர் கோடு வைத்து உள்ளனர் என்பதும் இதன் மூலம் பணத்தின் தேவை அவசியம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

முதல் முறையாக தற்போதுதான் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் தனது கடையில் க்யூ ஆர் கோடு வைத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது எந்த அளவுக்கு அடித்தட்டு மக்களுக்கு கூட இந்த டிஜிட்டல் இந்தியா பண பரிமாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பது இதுவே சாட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.