சாய்னா நேவாலை சாய்த்த மாளவிகா, சிந்துவிடம் தோல்வி; சாம்பியன் பட்டத்தை வென்றார் பி.வி.சிந்து!

இந்தியாவின் வெள்ளி நாயகியாக வலம் வருகிறார் பேட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்து. இவர் ஒலிம்பிக் போட்டிகளிலும், காமன்வெல்த் போட்டிகளிலும் இந்தியாவிற்கு பதக்கங்களையும் பாராட்டுகளையும் பெற்றுக்கொடுத்தார்.

தற்போது இந்தியாவில் சையத் மோதி சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இது இந்திய பேட்மிட்டன் வீராங்கனைகளுக்கான தொடர் ஆகும். இதில் சாம்பியன் பட்டத்தை வென்றார் பிவி சிந்து.

அதன்படி செய்து மோதி சர்வதேச பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் பி.வி. சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். லக்னோவில் நடைபெற்ற போட்டியில் 21-13, 21 க்கு 16 என்ற செட் கணக்கில் பி.வி. சிந்து வெற்றி பெற்றார்.

இறுதிப்போட்டி வரை முன்னேறி இளம் வீராங்கனை மாளவிகா பன்சோட் வெள்ளிப்பதக்கம் வென்றார். நாக்பூரைச் சேர்ந்த 20 வயதான மாளவிகா பன்சோட் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பி.டெக் படிக்கிறார்.

ஏற்கனவே இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவாலை வீழ்த்தியுள்ளார் மாளவிகா பன்சோட். இதனால் இறுதிப்போட்டியில் பி,வி. சிந்து வென்றதை விட மாளவிகா வெள்ளிப்பதக்கம் என்பதையே அதிக அளவு பேசப்பட்டு வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.