முதல் சுற்றில் வெற்றி: ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வாரா பிவி சிந்து!

d9ba4615b1e1c73ae5be18d22c0f1c06

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன என்பதும் இந்தியாவிலிருந்து சென்ற வீரர்கள் வீராங்கனைகள் ஒருசிலர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

குறிப்பாக பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை பெற்று தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில வீரர்கள் வெற்றி பெற்று வருகின்றனர் என்றும் மேலும் சில பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து முதல் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் இஸ்ரேல் நாட்டின் வீராங்கனையை முதல் சுற்றில் 21-7, 21-10 என்ற கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இதனையடுத்து ஒலிம்பிக் போட்டியில் பேட்மின்டன் பிரிவில் பிவி சிந்து பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment