அலர்ட்..! ”புதின் எந்த நேரத்திலும் அணு ஆயுதங்களை கையில் எடுக்கலாம்” – ஜெலன்ஸ்கி…
உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவி வந்தது. இதற்கு பல உலக நாடுகள் இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் பெரும் பொருளாதர சேதம் ஏற்படும் என எச்சரித்து வந்தனர்.
ஆனால் வரம்பு மீறிய ரஷ்யா கடந்த மாதம் பிப்ரவரி- 24 ஆம் தேதி முதல் உக்ரைன் மீது குண்டு மழை பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டில் பல அப்பாவி மக்கள் பரிதாபமாக கொன்று குவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஜெலன்ஸ்கி இதுவரையில் போரில் 20 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறினார். அதே போல உக்ரைன் தரப்பில் 3 ஆயிரம் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறினார்.
மரியுபோல் நகரில் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாக கூறிய அவர் அங்கு மிகவும் கடினமான சூழல் நிலவுவதாகவும் ரஷ்யா கூடுதல் படைகளை வரவழைப்பதாக குற்றம்சாட்டினார்.
புதின் அணு ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தலாம் என கூறிய ஜெலன்ஸ்கி உலகம் அதற்கு தயாராக இருக்கவேண்டும் என எச்சரித்துள்ளார்.
