Connect with us

ஆயுதங்களை கீழே போடுங்கள்; இல்லையென்றால் கீழே போடும்வரை தாக்கப்படுவீர்கள்-புடின் எச்சரிக்கை

russia hold drill amid ukraine tension 770x433 1

News

ஆயுதங்களை கீழே போடுங்கள்; இல்லையென்றால் கீழே போடும்வரை தாக்கப்படுவீர்கள்-புடின் எச்சரிக்கை

ஆயுதங்களை கீழே போடுங்கள்; இல்லையென்றால் கீழே போடும்வரை தாக்கப்படுவீர்கள்-புடின் எச்சரிக்கை

நேற்று பலரும் எதிர்பார்க்காத வண்ணமாக ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது போர் தொடுக்க உத்தரவிட்டிருந்தார். இதனால் ரஷ்ய படைகள் அதிதீவிரமாக உக்ரைன் நாட்டை மெல்ல மெல்ல கைப்பற்றிக்கொண்டு வருகிறது.

இருப்பினும் உக்ரைன் படைவீரர்களும் ரஷ்யாவின் ஒரு சில போர் விமானங்களை வீழ்த்தி கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைன் வீரர்கள் தங்களது ஆயுதங்களைக் கீழே போடும் வரை தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார்.

இந்நிலையில் உக்ரைன் வீரர்கள் தங்களது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அவர்கள் தங்கள் ஆயுதங்களை போட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிச் செல்லுங்கள் என்றும் ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.

உக்ரைன் மீது சிறப்பு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன் என்றும் கூறினார். உக்ரைனில் நேட்டோ படைகள் விரிவடைந்து விட்டதாக குற்றம் சாட்டி இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

முக்கியமாக ராணுவ மயமாதலை தடுக்க கிழக்கு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார். உக்ரைனை ஆக்கிரமிக்கும் எந்த ஒரு எண்ணமும் இல்லை என்றும் ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார். ஆயுதத்தைக் கீழே போடும் வரை தாக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top