புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்… தந்தை மீது புகார் கொடுத்த சிறுவன்

தெலுங்கானா மாநிலத்தில் ஒன்பது வயது சிறுவன் காவல் நிலையத்திற்கு தந்சிறுவன் புகார் தெலங்கானா மாநிலம் ராஜண்ணா-சிர்சில்லாவில் உள்ள அம்பேத்கர்நகர் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சுங்கபாக பரத், வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து முஸ்தாபாத் காவல் நிலையத்திற்குச் சென்றான்.

அங்கு இருந்த எஸ்.ஐ. வெங்கடேஷ்வரலுவிடம் குடிபோதையில் தனது தாய் தீபிகாவை எங்க அப்பா பாலகிருஷ்ணா அடித்து வருகிறார். அம்மாவைக் காப்பாற்றப் போனால், அக்காவையும் அடிக்கிறார் எனவே அவரைப் பிடித்து சிறையில் போடுங்க சார் என கூறினான்.

இதை கேட்ட எஸ்.ஐ. வெங்கடேஸ்வரலு சிறுவனின் பெற்றோர் இருவரையும் காவல் நிலையத்துக்கு வரவழைத்து கவுன்சிலிங் செய்து இனி மது அருந்தி வீட்டில் சண்டை சச்சரவு செய்ய கூடாது என கூறினார்.

எந்தவித அச்சமும் இன்றி காவல் நிலையத்தில் வந்து தந்தை மீது புகார் அளித்த சிறுவனைப் பாராட்டினார். பொது மகக்ளும் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் காவல்துறையை அணுகுமாறு கேட்டுக் கொண்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment