உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவி வந்த நிலையில் கடந்த மாதம் 24- ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா தீவிரத்தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இரண்டு மாத காலமாக நீட்டிக்கும் போரானது தீவிரமடைந்து வருவதால் உக்ரைன் நாட்டில் பல அப்பாவி மக்கள் பரிதாபமாக ரஷ்ய படைகள் கொன்று குவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் உக்ரைன் நாட்டின் கார்கீவ் நகரை ரஷ்ய படைகள் கைப்பற்ற முடியாமல் போனதால் வணிக நகரமான மரியுபோல் நகரத்தினை கைப்பற்ற ரஷ்ய படைகள் முழுமூச்சில் இறங்கியுள்ளனர்.
இதனால் மரியுபோல் நகரத்திற்குள் இருக்கும் உக்ரைன் வீரர்களை தங்களுடைய ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு உடனடியாக சரணடைய வேண்டும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
மேலும், ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருவதால் அந்நகரம் முழுவதும் புகை மூட்டமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.