Connect with us

100 ரூபாயை கீழே போட்டு இரண்டு லட்சம் கொள்ளை! விவசாயி அலறல்; மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்!!

bike roberry

Tamil Nadu

100 ரூபாயை கீழே போட்டு இரண்டு லட்சம் கொள்ளை! விவசாயி அலறல்; மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்!!

100 ரூபாயை கீழே போட்டு இரண்டு லட்சம் கொள்ளை! விவசாயி அலறல்; மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்!!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்பது போல முன்னொரு காலத்தில் விவசாயிகள் மிகவும் மதிக்கத் தக்கவர்களாக காணப்பட்டனர். ஆனால் காலங்கள் செல்ல செல்ல விவசாயிகள் அல்லல்படும் நிலைமைதான் காணப்படுகிறது.

அதுவும் குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு விவசாயிகளுக்கு பல்வேறு இன்னல்கள் அளிக்கின்ற இந்த நிலையில் விவசாயிடமே கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் கஷ்டத்தை கொடுத்துள்ளது.

அதன்படி கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் விவசாயியிடம் 2 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திட்டக்குடி அருகே விவசாயிடம் நூதன முறையில் ரூபாய் இரண்டு லட்சம் கொள்ளை அடித்த நபர்களுக்கு போலீசார் வலை வீசி தேடி கொண்டு வருகின்றனர்.

வங்கி கணக்கிலிருந்து கரும்பு வெட்டிய பணம் ரூபாய் 2 லட்சத்துடன் தொழுதூர் கூட்டுறவு வங்கிக்கு ஆறுமுகம் சென்றார். ஆறுமுகம் டாஸ்மாக் கடை அருகே நின்ற போது மர்ம நபர்கள் ரூபாய் 100, ரூபாய் 200 கரன்சி நோட்டுகளை கீழே வீசினார்.

கீழே விழுந்த ரூபாய் நோட்டுகளை எடுக்க முயன்றபோது ஆறுமுகத்திடம் இருந்த ரூபாய் 2 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்தனர். ஆறுமுகம் கூச்சலிட்டதை கண்ட அக்கம் பக்கத்தினர் துரத்த மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடினர். விவசாயி ஆறுமுகம் பணம் கொள்ளை போனது குறித்து அளித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top