வேற லெவல்!! சிறந்த திரைப்படத்திற்கான ‘தாதாசாஹேப் பால்கே’ விருதை தட்டிச் சென்ற புஷ்பா..

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடித்த சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படம் வசூல் ரீதியில் மாஸ் கிளப்பியது. இந்த படத்திற்கு ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படம் முழுக்க செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகி சுமார் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் சாதனையை படைத்தது.

இந்த நிலையில் மும்பையில் நேற்று தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் புஷ்பா படத்திற்கு ‘தாதாசாஹேப் பால்கே’ விருது வழங்கப்பட்டு 2022-ல் இந்த ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக தேர்வாகி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment