
பொழுதுபோக்கு
புஷ்பா ஹீரோவின் நியூ லுக் போட்டோ! புஷ்பா 2 லுக்கா? குழப்பத்தில் ரசிகர்கள்!
தெலுங்கு சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அல்லு அர்ஜுன்க்கு தெலுங்கு சினிமாவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளனர்.தெலுங்கு மொழியில் சுகுமார் இயக்கத்தில் வெளியான அதிரடி பரபரப்புத் திரைப்படம் தான் புஷ்பா. இந்தப் படத்தில், அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க பகத் பாசில் தெலுங்கில் அறிமுகமாகி வில்லனாக நடித்திருப்பார், ராஷ்மிகா மந்தண்ணா ஹீரோயினாக நடித்திருப்பார்.
தற்போழுது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக தயாராகி வருகிறது. முதல்பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாய் அதிரடி ஆக்க்ஷன் உடன் கூடிய அசத்தலான கதையில் இந்த படம் தயாராக உள்ளது.பிரமாண்ட பொருட்ச்செலவில் வெளியாகும் ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் 10 மொழிகளில் உருவாகயுள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ள நிலையில், தற்போது விளம்பரப் படம் ஒன்றிற்காக அல்லு அர்ஜுன் தன்னுடைய கெட்டப்பை மாற்றியுள்ளார். தோல் ஜாக்கெட்,கூலர்ஸ், சிகரெட், காதில் 2 கடுக்கன் சகிதம் மிகவும் மாடுபட்ட இந்தத் தோற்றம் சமூக வலைதளங்களில் தற்போழுது ட்ரெண்டாகி வருகிறது.
துளியும் மேக்கப் இல்லாமல் த்ரிஷாவை பார்த்துள்ளீர்களா! வேற லெவல் போட்டோஸ்!
அல்லு அர்ஜுனின் இந்த மாஸான கெட்அப் பார்த்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
