
பொழுதுபோக்கு
புஷ்பா 3 படமா ? ஃபஹத் பாசில் சொன்ன அப்டேட்!
தெலுங்கு மொழியில் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான அதிரடி பரபரப்புத் திரைப்படம் தான் புஷ்பா.இந்தப் படத்தில், அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க பகத் பாசில் தெலுங்கில் அறிமுகமாகி வில்லனாக நடித்திருப்பார், ராஷ்மிகா மந்தண்ணா ஹீரோயினாக நடித்திருப்பார்.
இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக தயாராகி வருகிறது. முதல்பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாய் அதிரடி ஆக்க்ஷன் உடன் கூடிய அசத்தலான கதையில் இந்த படம் தயாராக உள்ளது.இந்த படத்திற்கு மேலும் பலமாக வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
இப்படத்தில் அல்லு அர்ஜுனின் சம்பளம் சுமார் 85 கோடிகள் வரை இருக்கலாம் என தெலுங்கு திரையுலகில் கூறப்படுகிறது.இவை அனைத்திற்கும் மத்தியில் பன்வர் சிங் ஷெகாவத்தின் முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த பாத்திரத்தில் நடிக்கும் ஃபஹத் பாசில், எழுத்தாளர்களிடம் பேசும் பரபரப்பான மற்றும் அற்புதமான செய்தியை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் “புஷ்பா 3” குறித்தும் பேசப்படுகிறது. ஃபஹத் ஃபாசில் இது குறித்து சூசகமாக கூறியதும் ஊகங்கள் மேலும் வலுப்பெற்றன.சமீபத்தில் ஒரு பேட்டியில் ஃபஹத் பாசில், “புஷ்பா 3” படத்தின் மூன்றாம் பாகத்திற்கு தேவையான பொருட்கள் இருப்பதால் இயக்குனர் சுகுமார் தான் அதை உருவாக்க முடியும்.
சிம்புவிற்கு 1000 அடியில் பேனர்! எந்த ஊரில் ? எந்த படத்திற்கு தெரியுமா?
மூன்றாம் பாகத்திற்காக அல்லு அர்ஜுன் இன்னும் சில வருடங்களை செலவழிக்க வேண்டும் என்றும் அது சாத்தியமில்லை என பலர் கருதுகின்றனர். புஷ்பா 2 க்காக ரசிகர்கள் ஆவலாக இருக்கும் பொழுது புஷ்பா 3” குறித்து வரும் புரளிகள் ரசிகர்களின் ஆவலை மேலும் பெரிதாக்குகிறது.
