Connect with us

‘புஷ்பா 2’ அப்டேட் ! தள்ளி போகும் படப்பிடிப்பு!

Pushpa the rule part 2 1024x576 1

பொழுதுபோக்கு

‘புஷ்பா 2’ அப்டேட் ! தள்ளி போகும் படப்பிடிப்பு!

இயக்குநர் சுகுமார் எழுதி இயக்கி, தெலுங்கு மொழியில் வெளியான அதிரடி பரபரப்புத் திரைப்படம் தான் புஷ்பா.இந்தப் படத்தில், அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க பகத் பாசில் தெலுங்கில் அறிமுகமாகி வில்லனாக நடித்திருப்பார், ராஷ்மிகா மந்தண்ணா ஹீரோயினாக நடித்திருப்பார் .நடிகை ராஷ்மிகா கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் தரமாக நடித்துள்ளார். கவர்ச்சிக்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் நடித்துள்ளார்.

திரைப்படத்தின் இரண்டு பாகங்களில் முதல் பாகம், ஆந்திரப் பிரதேசத்தின் சேசாசலம் மலைப்பகுதியில் செஞ்சந்தன மரக்கடத்தலை அடிப்படையாகக் கொண்டு கதைக்களம் அமைந்துள்ளது.

pushpa131656366399

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் 17 டிசம்பர் 2021 தெலுங்கிலும், மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

மைத்திரி மூவி மேக்கர்சும் முட்டம் செட்டி மீடியா நிறுவனமும் இதை தயாரித்த இப்படம் 250 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

புஷ்பா முதல் நாளில் ரூ.45 கோடி வசூலித்தது. படம் வெளியாகி அந்த வகையில் 50 நாட்களில் உலகளவில் 365 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையை புஷ்பா படம் படைத்தது.

இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக தயாராகி வருகிறது. முதல்பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாய் அதிரடி ஆக் ஷன் உடன் கூடிய அசத்தலான கதையில் இந்த படம் தயாராக உள்ளது.இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில் இருவருக்கிடையிலான மோதல் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

header social Mythrii Movie Makers 61c96a15659e9

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் வெற்றியை உறுதிபடுத்துவதற்காக இப்போது ஹிந்தி நடிகர் ஒருவரையும் கூடுதலாகச் சேர்க்கலாமா என நினைக்கிறார் இயக்குனர். முதல் பாகத்திற்கு ஹிந்தியில் நல்ல வசூல் கிடைத்ததை தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் அதை விட பன்மடங்கு வேண்டுமென்றால் ஹிந்தி நடிகரும் வேண்டும் என பாலிவுட்டில் கருத்துக்கள் வருகிறது.

தளபதி 67 படத்தில் வில்லனுக்கு என்ன ரோல் தெரியுமா? மாஸான அப்டேட்!

எனவே, கதையில் சில மாற்றங்களைச் செய்து தொடங்கியுள்ளார் இயக்குனர் சுகுமார். அது முடிவான பிறகே படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும். எனவே, படம் 2024ல் வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என தகவல் கிடைத்துள்ளது.

 

 

 

 

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top