
பொழுதுபோக்கு
புஷ்பா 2 மெர்சம் அப்டேட்..!! விஜய் சேதுபதிக்கு ஜோடி யார் தெரியுமா?
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான புஷ்பா. இப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூலிலும் பட்டிதொட்டியெல்லாம் பட்டைய கிளப்பியது.
அதே போல் அவருக்கு ஜோடியாக ஸ்ரீவள்ளி என்கிற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக அவர் ஆடிய ஏ சாமி ஏ சாமி என்ற பாடலானது பம்பர் ஹிட் கொடுத்தது.
புஷ்பா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் விரைவில் வருவற்கு ரெடியாகியுள்ளது. அதாவது அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக விஜய் சேதுபதியை நடிக்க வைக்க படக்குழு தேர்வு செய்துள்ளனர்.
ஏற்கனவே முதல் பாகத்தில் அவர் நடிக்க படக்குழுவினர் கேட்டப்போது மாஸ்டர் படபிடிப்பில் பிஸியாக இருந்தால் நடிக்க முடியவில்லை என கூறியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இருப்பினும் 2-ம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்க கமிட் ஆகியுள்ளதால் அவருக்கு ஜோடியாக பிரியாமணி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
