தெலுங்கில் கடந்த ஆண்டு 17 டிசம்பர் 2021ல் வெளியான அதிரடி பரபரப்புத் திரைப்படம் தான் புஷ்பா.இந்தப் படத்தில், அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க பகத் பாசில் தெலுங்கில் அறிமுகமாகி வில்லனாக நடித்திருப்பார், ராஷ்மிகா மந்தண்ணா ஹீரோயினாக நடித்திருப்பார்.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் தெலுங்கிலும், மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக தயாராகி வருகிறது. முதல்பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாய் அதிரடி ஆக்க்ஷன் உடன் கூடிய அசத்தலான கதையில் இந்த படம் தயாராக உள்ளது.
புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் 10 மொழிகளில் உருவாகயுள்ளது. தற்போழுது இந்த படத்தில் ஸ்கிரிப்ட் பணி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஒரு பேட்டியில் ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர். புஷ்பா: தி ரூல் படத்திற்காக மூன்று பாடல்களை இசையமைத்து முடித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
முதல்பாகத்தில் வெற்றிக்கு ‛ஓ சொல்றியா மாமா’ என்ற கவர்ச்சி பாடலும் ஒரு காரணம்.அந்த குத்தாட்ட பாடலுக்கு கவர்ச்சியாக சமந்தா ஆடினார். இந்த பாடல் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது. ஹிந்தியிலும் சமந்தாவை மரிலும் பிரபலமடைய வைத்தது.
குதிரை மேலே ராணி போல சவாரி செய்யும் காஜல்! கலக்கலாக இருக்குதே ..
இந்நிலையில் இரண்டாம் பாகத்திலும் அதுபோன்று ஒரு பாட்டை வைத்துள்ளனர் படக்குழு. இதில் சமந்தா ஆட மறுத்துவிட்டார். அதற்கு மாறாக திஷா பதானி ஆடுவார் என கூறப்பட்டது. தற்போது நடிகை மலைகா அரோராவை ஆட வைக்க பேசி வருகின்றனர்.