புஷ்பா 2 – தேவி ஸ்ரீ பிரசாத் வெளியிட்ட பாடல் அப்டேட்!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் புஷ்பா. இப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றது வசூலிலும் பட்டிதொட்டியெல்லாம் பட்டைய கிளப்பியது. புஷ்பா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் விரைவில் வருவற்கு ரெடியாகியுள்ளது.

முதல்பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாய் அதிரடி ஆக்க்ஷன் உடன் கூடிய அசத்தலான கதையில் இந்த படம் தயாராக உள்ளது.மேலும் நடிகர் விஜய் சேதுபதியிடம் இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். பிரமாண்ட பொருட்ச்செலவில் வெளியாகும் ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் 10 மொழிகளில் உருவாகயுள்ளது. தற்போழுது இந்த படத்தில் ஸ்கிரிப்ட் பணி நடைபெற்று வருகிறது.

Pushpa the rule part 2 1024x576 1 1 1 2 1

புஷ்பா படத்தின் வெளியீட்டின் போது ஒட்டுமொத்த தேசமே ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் நினைப்பில் இருந்தது. படம் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையும் வெற்றிக்கு ஒரு காரணம். பாடல்கள் சார்ட்பஸ்டர்களாக மாறியது மற்றும் ரீல்ஸிலும் வைரலானது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர். புஷ்பா: தி ரூல் படத்திற்காக மூன்று பாடல்களை இசையமைத்து முடித்துள்ளதாக அவர் தெரிவித்தார். தொடர்ச்சியின் ஸ்கிரிப்ட் வேறு லெவலில் இருப்பதாகவும், இது அவரை உற்சாகப்படுத்தியது மற்றும் ரசிகர்களுக்கு உறுதியளித்தது என்றும் அவர் கூறினார்.

சிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் இணையும் ரஜினி ! வெளியான சர்ப்டைஸ் நியூஸ் !

pushpa 2 vijay sethupathi 2 1

தேவி ஸ்ரீ பிரசாத் மேலும் கூறுகையில், பல பாலிவுட் பிரபலங்கள் படத்திற்கான அவரது BGM வேலையைப் பாராட்டியுள்ளனர். சமீபத்தில் 2ம் பாகத்திற்கான பூஜை விழாவும் நடைபெற்றது.இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment