செம்ம வைரல்..! நெல்சனை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடித்த மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாஸ் காட்டி வருகிறது. இந்த சூழலில் பீஸ்ட் படத்தின் இயக்குனரான நெல்சனை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

இதில் ஒரு நெட்டிசன் யோகி பாபு நடித்த கூர்கா படத்தையே பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் பீஸ்ட் படத்தினை பார்த்தால் மண்டைக் கோளாறு வந்துவிடும் என அஜித் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மற்றொரு நெட்டிசன் வடிவேலுவின் புகைப்படத்தினை வைத்து முன்னாடியாவது ஒரு ஆர்மிகிட்டதான் அடி வாங்குவேன் இப்போ எல்லா ஆர்மி கிட்டயும் வாங்குகிறேன் என நாசுக்காக கலாய்த்துள்ளார்.

மற்றொருவர் இரண்டாவது பாதிய நல்லா எடுத்திருந்துருக்காலம். மொத பாதிய எடுக்காமயே இருந்திருக்கலாம் என்றும்  அவன் உருட்டுன உருட்டுல கந்தர்வகோட்டை சமஸ்தானமே தலக் புலக்னு ஆடிப்போச்சி என  இணையத்தை தெறிக்கவிட்ட மீம்ஸ்களை போட்டு இயக்குனர் நெல்சனை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment