Connect with us

போலீசார்-அர்ச்சகர்கள் இடையே தள்ளுமுள்ளு..!! முருகன் கோயிலில் பரபரப்பு..!!

yy 2

தமிழகம்

போலீசார்-அர்ச்சகர்கள் இடையே தள்ளுமுள்ளு..!! முருகன் கோயிலில் பரபரப்பு..!!

அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பக்தர்கள் மற்றும் அர்ச்சகரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்செந்தூர் முருகன் கோவில்களில் பக்தர்களிடம் அர்ச்சகர்கள் பணம் பெற்றுக் கொண்டு மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் செல்லும் வரிசையில் அனுமதிக்க படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமாக இருந்தது.

இத்தகைய செயலால் வயதானவர்களும், மாற்றுத் திறனாளிகளும் கடுமையான சிரமங்களை சந்தித்து வருவதாக, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் காவல்துறையினரிடம் பக்தர்கள் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அர்ச்சகர்களிடம் கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் வாய்த் தகராறு முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தினால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதோடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top