நவராத்திரி பண்டிகையின் நோக்கம்

நவராத்திரி பண்டிகையின் முக்கிய நோக்கமே நாம் எல்லோரும் ஒன்றே, அனைத்தும் இறைசக்தியின் வடிவமே என்று உணர்த்துவதுதான். துர்க்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று இறைசக்திகளும் ஒன்று சேர்ந்து அவதாரம் எடுத்து மகிஷன் எனும் அரக்கனை அழிப்பதையே நவராத்திரி  வரலாறு என்கிறார்கள்.

                துர்க்கையான பார்வதியை முதல் 3 நாட்களும், அடுத்து லட்சுமியை 3 நாட்களும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் 10 வது நாள் விஜய சாமுண்டீஸ்வரி யையும் வணங்க வேண்டும்.

b337afa6cf1e8bad1d565a7a08ab2b58

                துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து மன உறுதி கிடைக்கும்.

                லட்சுமியை வணங்கினால் பொன், பொருள், நல்ல ஒழுக்கம், உயர்ந்த பண்பாடுகள், கருணை, மனிதநேயம் மற்றும் நல்ல சிந்தனைகள் கிடைக்கும்.          

சரஸ்வதியை வழிபட்டால் ஞானம், உயர்ந்த கல்வி மற்றும் கலைகளில் வெற்றி கிடைக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews