முடிவுக்கு வரும் புரட்டாசி: காசிமேட்டில் குவியும் மீன் பிரியர்கள்..!!!

புரட்டாசி மாதத்தில் நான்கு சனிக்கிழமை நிறைவு பெற்றதை தொடர்ந்து காசிமேடு மீன் சந்தை மீண்டும் களைகட்டியுள்ளது. குறிப்பாக 4 சனிக்கிழமைகளில் இந்துக்கள் விரதம் கடைப்பிடிப்பதால் இறைச்சி விற்பனை என்பது மந்தமாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் மீன்களை வாங்குவதற்காகவே மீன் பிரியர்கள் காசிமேடு மீன் சந்தையில் குவிந்துள்ளனர். அதன் படி, வஞ்சிரம் ரூ.600-ஆகவும், பெரிய அளவிலான வஞ்சிரம் 1000 முதல் 1500 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் வவ்வால் ரூ.500 முதல் ரூ.600 வரையிலும், சங்கரா ரூ.200 ஆகவும், நெத்திலி ரூ.200 முதல் ரூ.400 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதனை தொடர்ந்து தோல்பாறை ரூ.600 என்றும் காரகோழி, இறால், நண்டு போன்றவைகள் குறைந்த விலையில், அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் மற்ற மீன் சந்தைகளில் மீன்களின் வரத்து குறைவாக காணப்படுவதனால், அதிகளவில் ஏலத்தில் வாங்கி வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment