புரட்டாசி முதல் சனிக்கிழமை கோலாகலம்; பெருமாள் கோயில்களில் திரண்ட பக்தர்கள்!

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள வெங்கடாஜலபதி திருக்கோவிலில் அதிகாலையில் இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். புரட்டாசி மாத விரதம் தொடங்கியுள்ள நிலையில், இன்று பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான கும்பகோணம் அருகில் உள்ள ஒப்பிலியப்பன் கோவில் என அழைக்கப்படும் வெங்கடாஜலபதி திருக்கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். உற்சவர் எண்ணப்பர், ஸ்ரீதேவி, பூமிதேவி உடன் பக்தர்களுக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்து வருகிறார். இதேபோல் மூலவர் வெங்கடாஜலபதி சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

தஞ்சாவூரில் அமைந்துள்ள தஞ்சாவூர் வீரநரசிம்மப் பெருமாள் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், ஜனார்த்தனப் பெருமாள் கோயில், ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயில், காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில், மதுரை கள்ளழகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment