காசிக்கு நிகரான புரசைவாக்கம் கங்காதீஸ்வர் கோவில்

1698130c46138d7ed09198604988681a
சென்னை புரசைவாக்கத்தில் கங்காதீஸ்வரர் கோவில் எங்குள்ளது என கேட்டால் எல்லோரும் கை காண்பிக்கும் அளவுக்கு மிக முக்கியமான சாலை அருகே உள்ளது. கங்காதீஸ்வரர் சிவாலயம்.

 புராதணப் பெருமைகள் கொண்ட இந்த ஆலயம் இக்ஷ்வாகு வம்சத்துடன் தொடர்பு கொண்ட தலம் என்று முன்னோர்களால் சொல்லப்படுகிறது  ரகு குலம் என்று புராணங்கள் சொல்லும் இந்த வம்சத்தில் ஸ்ரீராமன் அவதரித்தார். அவருடைய முன்னோர்களில் ஒருவர்தான் சகரன்.இவர்

 ஒருமுறை, இவர் மிக பிரமாண்டமாக அசுவமேத யாகத்தைத் நடத்தினார். இதனால் அச்சமடைந்த இந்திரன், யாகத்தின்  இறுதிநாளில் யாகக் குதிரையைக் கவர்ந்து சென்று, கபில முனிவரின் ஆசிரமத்தின் அருகில் கட்டிவிட்டுச் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.

குதிரையைக் காணாமல் திகைத்த சகரன், அதைக் கண்டுபிடித்து வருமாறு தன் 60,000 புதல்வர்களையும் அனுப்பி வைத்தார். அப்படி, குதிரையைத் தேடியலைந்த சகர மைந்தர்கள், கபிலரின் ஆஸ்ரமத்தில் குதிரையை பார்த்தனர். அங்கே அவர்களின் செயல்பாடுகளால், கபில முனிவரின் தவம் கலைந்தது. இதில் கோபமுற்ற கபில முனி, அவர்களை சபித்தார். அதன் விளைவாக சகர மைந்தர்கள் எரிந்து சாம்பலானர்கள்.

காலங்கள் சென்ற பிறகு சகரனின் வம்சத்தில் பகீரதன் தோன்றினார். சிறந்த சிவபக்தரான பகீரதன், தன் முன்னோரை கடைத்தேற்ற விரும்பினார். இவருடைய கடும் தவப்பயன் காரணமாக, கங்கை  பூமிக்கு வந்ததும், பகீரதனின் முன்னோர் கடைத்தேறியதும்  வரலாறு ஆகும்.

முன்னோர் நற்கதி அடைந்ததும் கண்டு நெகிழ்ந்து அதன் தொடர்ச்சியாக சிவனாரை வழிபட்டார். அவ்வாறு அவர் வழிபட்ட தலமே, புரசைவாக்கம் ஸ்ரீகங்காதீஸ்வரர் கோயில்.

காசிக்கு நிகரான தலம் என்று போற்றப்படும் இந்த கங்காதீஸ்வரர் தலத்தை வணங்கி,  சகல வளங்களும் பெறுவோம்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews