Entertainment
டாஸ்க் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்?
பிக் பாஸ் நிகழ்ச்சி வார இறுதிக்குப் பின் ஏதாவது மாற்றம் ஏற்படும் இருந்த பார்வையாளர்களுக்கு கிடைத்தது ஏமாற்றமே ஆகும், லாஸ்லியாவும் கவினும் யார்னாலும் என்ன்னாலும் சொல்லிக்கோங்க, ஒரு வாட்டி முடிவெடுத்துட்டா எங்க பேச்சை நாங்களே கேக்கமாட்டோம் அப்டிங்கற பாணியில சுத்திட்டு இருக்காங்க.
நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்ச்சி பாதி முடிவடைந்தநிலையில், அதன் பாதியிலிருந்து துவங்கியது. அதில் நேற்றைய தினத்தில் சேரன், லாஸ்லியா, வனிதா ஆகியோர் இந்த போட்டியின் டைட்டில் வின்னராக வர தங்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் பற்றிக் கூறினார்கள்.

அதன் பின்னர் இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் துவங்கியது. இந்த டாஸ்க்கில் தமிழ் பாரம்பரிய கலைகளை ஒருவர் பயிற்றுவிப்பார் என்றும், அதனை கற்றுக்கொண்டு ஒவ்வொருவரும் தினமும் செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
நேற்று காளீஸ்வரன் என்ற நாட்டுப்புறக்கலைஞர் பொம்மலாட்டம் சொல்லிக்கொடுக்க உள்ளே வந்தார்.
அவர் பொம்மலாட்டம் செய்யும்போது செருப்பு அணிய மாட்டேன் என்று கூறியது அனைவரையும் நெகிழ வைத்தது.
பொம்மலாட்டத்தின் வரலாற்றினப் பற்றிக் கதையாக சொன்னது போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களையும் கவர்ந்தது.
அதன் பின்னர் வீட்டில் உள்ளவர்களுக்குப் பொம்மலாட்டம் எப்படிச் செய்யவேண்டும் என அவர் சொல்லிக்கொடுத்தார்.
