நாம் வெளியே போனது போல் பஞ்சாபும் வெளியே போகணும்.. டெல்லி மாஸ்டர் பிளான்..!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியில் இன்று பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்ட டெல்லி, பஞ்சாபையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இனிமேல் இலக்க எதுவும் இல்லை என்ற நிலையில் இருக்கும் டெல்லி அணி இன்று டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வென்றால் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் நாம் வெளியேறியது போல் பஞ்சாபையும் வெளியேற்ற வேண்டும் என்ற வெறித்தனத்துடன் டெல்லி அணி என்று பந்துவீசி வருகிறது

pbks11அந்த அணி மிக அபாரமாக பந்துவீசி 10 ஓவர்களுக்குள் மூன்று முக்கிய விக்கெட்டுக்களை எடுத்துவிட்டது. கேப்டன் ஷிகர் தவான், லிவிங் ஸ்டோன் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுக்களை பஞ்சாப் இழந்துவிட்டது. இதனை அடுத்து நாம் வெளியே போனது போல் பஞ்சாபையும் வெளியே அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.

பஞ்சாப் அணி தற்போது புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது. இன்று அந்த அணி தோல்வி அடைந்தால் ஹைதராபாத், டெல்லியை அடுத்து அடுத்த சுற்று செல்லும் வாய்ப்பை இழந்த மூன்றாவது அணியாக கருதப்படும். எனவே இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெறித்தனத்துடன் விளையாடி வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே இன்று நடந்த முதல் போட்டியில் லக்னோ அணி ஹைதராபாத் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது போல் பஞ்சாபும் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...