தமிழில் தாம் தூம், தலைவி படங்களில் நடித்தவர் கங்கணா ரணாவத் . பாஜக ஆதரவாளரான இவர் அடிக்கடி ஆவேசப்பட்டு எழுதிய டுவிட்டுகள் பெருத்த விவாதத்தை உண்டாக்கி உள்ளன.
மஹாராஷ்டிராவின் சிவசேனா அரசை கடுமையாக ஒரு முறை தாக்கி பேசிய நிலையில் அவர் மஹாராஷ்டிரா மாநிலத்துக்குள்ளேயே நுழைய முடியாத நிலை இருந்து வந்தது.
மேலும் ஒரு முறை பஞ்சாப் விவசாயிகளின் டெல்லி போராட்டத்தை கடுமையாக எதிர்த்து பேசிய நிலையில் விவசாயிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் நேற்று பஞ்சாப் சென்ற போது பிரதமரின் காரை வழிமறித்த விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது. எந்த ஒரு பிரதமரும் இது போல் இதுவரை தங்கள் பயணத்தின் போது சாலை மறியலில் மாட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பஞ்சாப்பில் நடந்தது அவமானகரமான விசயமாகும் .
பிரதமர் என்பவர் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் ஆவார் பல கோடி மக்களின் குரல் பல கோடி மக்களின் பிரதிநிதி.
அவர் மீதான தாக்குதல் என்பது ஒவ்வொரு இந்தியரின் மீதான் தாக்குதல், ஜனநாயகத்தின் மீதான தாக்குதலும் கூட. பஞ்சாப் தீவிரவாத நடவடிக்கைகளின் மையமாக மாறிக் கொண்டு வருகிறது.
அவர்களை நாம் இப்போது தடுக்கவில்லை என்றால் இந்த தேசம் ஒரு மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என கங்கணா ரணாவத் கூறியுள்ளார்.