Connect with us

பஞ்சாப் பாடகர் கொலை வழக்கு; என்ஐஏ அதிகாரிகள் சோதனை!!

singer

செய்திகள்

பஞ்சாப் பாடகர் கொலை வழக்கு; என்ஐஏ அதிகாரிகள் சோதனை!!

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் டெல்லி, ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

பஞ்சாப் பாடகர், கட்சியின் முக்கிய பிரமுகருமான சித்து மூஸ்வாலா கடந்த மே மாதம் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் டெல்லி திகார் சிறையில் இருக்கும் தாதா லாரன்ஸ் விஷ்ணு என்பவர் கொலைக்கு பின்னணியில் செயல்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை காலவில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக சந்தேகத்தின் அடிப்படையில் டில்லி, ஹரியானா, பஞ்சாப் போன்ற இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன் படி, சுமார் 50 இடங்களில் சோதனை நடத்தி வரும் நிலையில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்படலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top