சென்னையை வீழ்த்தி மும்பையை பின்னுக்கு தள்ளிய பஞ்சாப்!

பஞ்சாப் அணி இன்று சென்னை கொடுத்த இலக்கை 13 ஓவர்களில் எடுத்து புள்ளிப்பட்டியலில் மும்பை அணியை பின்னுக்கு தள்ளி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இன்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கிடையிலான போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்திருந்தது

இதனையடுத்து 135 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியின் ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடி என்பதும் குறிப்பாக கேப்டன் கேஎல் ராகுல் 42 பந்துகளில் 98 ரன்கள் விளாசினார் என்பதும் அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் அடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து 13 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் பஞ்சாப் எடுத்து மிக அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் காரணமாக பஞ்சாப் அணி தற்போது புள்ளி பட்டியலில் மும்பை அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் நாளை நடைபெறும் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி படு தோல்வி அடைந்தால் மட்டுமே பஞ்சாப் அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.