பாவங்களை நீக்குவதற்கு செய்யப்படும்  புனித நீராடும் முறைகள்….

41085beb32b344634e68c932ed204429

புனித தளங்களில் நீராடினால் நாம் செய்த பாவங்கள் தீரும் என்பது நம் அனைவரின் நம்பிக்கை. இது பற்றி தான் நேற்று பார்த்தோம். இன்று நாம் பார்க்க இருப்பது புனித தளங்களில் நீராடும் முறையைப் பற்றி தான்…

கங்கை போன்ற புனித நதிகளில் நீராடுபவர்கள் மற்ற நிற உடைகளை அணிவதை விட மஞ்சள் அல்லது சிவப்பு நிற உடைகளை அணிவது மிகவும் நல்லது.

பாவங்களை தொலைப்பதற்கு இப்படி நீராடுபவர்கள் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி பார்த்து நின்று முதலில் உள்ளங்கையில் நீரை எடுத்து அதை மூன்று முறை தலையில் தெளிக்க வேண்டும். அதற்கு அடுத்து தான் நீரில் மூழ்க வேண்டும். அதாவது மூன்று முறை நீரில் மூழ்கி எழ வேண்டும்.

முதல் முறை மூழ்கி எழும்போது நாம் செய்த பாவங்கள் விலகும். இரண்டாம் முறை மூழ்கி எழும்போது சொர்க்கப்பேறு கிடைக்கும்.  அடுத்து  மூன்றாம் முறை மூழ்கி எழும்போது நாம் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் வந்து சேரும்.

மேலும் எந்த உடையில் இருந்து நீராடுகிறமோ அதை திருப்பி வீட்டிற்கு எடுத்து வரக் கூடாது. அங்கயே விட்டு வர வேண்டும். மேலும் இந்த புனித நீராடுதலை அதிகாலை நேரத்தில் மேற்கொள்வது நமக்கு இன்னும் நல்லது. இரவு நேரத்தில் நீராடக் கூடாது.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.