புனேவில் பயங்கரம்!! ‘த்ரிஷ்யம்’ படம் பார்த்து கொலை செய்த சகோதரர்கள்..!!

வட மாநிலங்களை பொறுத்தவரையில் கொலை சம்பவங்கள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அந்த வகையில் த்ரிஷ்யம் படம் பார்த்து புனேவில் தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. புனே அடுத்த சாக்கன் பகுதியை சேர்ந்தவர் பன்சோட் தனஞ்சய். இவருக்கு சுஜித் பன்சோட் ( வயது 21), அபிஜித் பன்சோட் (வயது 18) என மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் தனஞ்சய் பன்சோடேவிற்கு நாக்பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியதையடுத்து அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். இத்தகைய சம்பவம் குறித்து தந்தையிடம் கேட்கவே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அண்டா அண்டாவாக பாயாசம்: ஆண்கள் மட்டும் கொண்டாடிய வினோத திருவிழா!!

இந்த சூழலில் தந்தையின் நடத்தையினால் ஆத்திரம் அடைந்த மகன்கள் தனஞ்சய் பன்சோடேவை தீர்த்து கட்ட திட்டமிட்டனர். அதன் படி, த்ரிஷ்யம் படம் பார்த்து தந்தையை கொலை செய்ததாகவும், பின்னர் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க ஆதாரங்களை அழித்துள்ளனர்.

இதனையடுத்து வழக்கை திசை திருப்புவதற்காக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதே சமயம் 2 பேரிடமும் சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் கொலை செய்தது அம்பலமானது. தற்போது 2 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், புனேவில் சினிமா பட பாணியில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.