News
தொகுதி பங்கீட்டில் மீண்டும் இழுபறி: முக்கிய ஆலோசனை நடத்துகிறது தேமுதிக!
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் தலா 23 மற்றும் 20 தொகுதிகளைப் பெற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திவரும் தேமுதிக இன்னும் பேச்சுவார்த்தையை முடிக்கவில்லை
தேமுதிக 35 தொகுதிகள் வரை கேட்டு வருவதாகவும் ஆனால் அதிமுக 15 முதல் 18 தொகுதிகள் வரை தருவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுவதால் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி தேமுதிக ஒரு ராஜ்யசபா தொகுதியும் கேட்டு வருகிறது என்பதால் இழுபறி நீடித்து வருகிறது
இந்த நிலையில் அதிமுக மற்றும் தேமுதிக தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருவதை அடுத்து தேமுதிக அவசர ஆலோசனை நடத்த உள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை காலை பத்து முப்பது மணிக்கு இந்த அவசர ஆலோசனை நடைபெறும் என்றும் இந்த ஆலோசனையில் விஜயகாந்த், பிரேமலதா, எல்.கே. சுதீஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் இந்த அவசர ஆலோசனையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
நாளை நடைபெறவிருக்கும் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் தேமுதிக என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
