பூஜை மணியில் இவ்வளவு ஆன்மிக தகவல் இருக்குதா? மிஸ் பண்ணிடாதீங்க!

கோவிலில் அடிக்கும் மணியின் தொனியை வைத்தே கோவிலில் என்ன நடக்கின்றது என தெரிந்து கொள்ளலாம். பொதுவாக மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது.

மணி அடிப்பதில் பல விதங்களும் அதற்கான அர்த்தங்களும் வித்தியாசப்படும்.

மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப் படுகிறது என்று அர்த்தம்.

வேகமாக அடித்தால் தூபம், தீபம் ஆகிறது என அர்த்தம்.

இரண்டு பக்கமும் விசேஷமாக அடித்தால் திருமஞ்சனம் நடக்கிறது என்று அர்த்தம்.

மெதுவாக அடித்தால் பகவான் அமுது செய்கிறான் என்று அர்த்தம்.

மணி அடிப்பதை மஹான்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என முன்னோர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

மணியை வலது கையில் எடுத்து, இடது கையில் மாற்றிக்கொண்டு கற்பூர ஆரத்தித் தட்டை வலப்பக்கம் எடுக்க வேண்டும்.

பூஜை முடிந்த பிறகு இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றிக் கொண்டு கீழே வைக்க வேண்டும். இடது கையில் இருந்து அப்படியே மணியை கீழே வைக்க கூடாது.

இடது கையால் மணியை எடுக்கவே கூடாது.

தீபாவளிக்கு குட்டீஸ்க்குப் பிடிச்ச தித்திப்பான அதிரசம் செய்வது எப்படி?
கண்டை என்பது சாமான்யமல்ல. அதில் பிரணவம் த்வனிக்கிறது. தேவதைகளை வரவழைக்கிறது. துஷ்ட ப்ரக்ருதிகளை ஓட்டுகிறது.

பகவானுக்கு அமுது காணும்போது நிசப்தமாக இருக்க வேண்டும். அமங்கலமான பேச்சுகள் காதில் விழக்கூடாது. மணி அடித்தால் அவை காதில் விழாது.

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் மிக்ஸர் எப்படி பண்ணனும் தெரியுமா

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment