Tamil Nadu
அதிமுகவில் இணைந்த இன்னொரு அமமுக பிரபலம்: பெரும் பரபரப்பு!

கடந்த சில மாதங்களாகவே தினகரனின் அதிமுக கட்சியில் இருந்து பலர் வெளியேறி திமுக மற்றும் அதிமுக வில் இணைந்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். முக்கியமாக செந்தில் பாலாஜி மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் விலகியது அமமுகவிற்கு பெரும் பின்னடைவு என கருதப்பட்டது
இந்த நிலையில் அமமுகவிற்கு பெரும் பக்கபலமாக இருந்த புகழேந்தியும் இன்று அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவர் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அவருக்கு அதிமுகவில் முக்கிய பதவி வழங்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன
நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 95 இடங்களை கைப்பற்றி அமமுக இன்னும் தொண்டர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதால் டிடிவி தினகரன் தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் கட்சியை நடத்தப்போவதாகவும் வரும் சட்டமன்ற தேர்தலில் தான் யார் என்பதை நிரூபிக்க போவதாகவும் தெரிவித்து வருகிறார். இதனால் எத்தனை பேர் அமமுகவில் இருந்து விலகினாலும் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்று அவர் தன்னம்பிக்கையுடன் கூறியதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
