கம்ப்யூட்டர் ஹேக்கராக நடிக்கும் புகழ்: எந்த படத்தில் தெரியுமா?

d1224a379ab15363a83e6ec37291365e

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பலர் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே. அந்தவகையில் கோமாளிகளில் ஒருவரான புகழ் தற்போது சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் கோலிவுட் திரையுலகில் பிஸியான நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 1972 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரித்த ’காசேதான் கடவுளடா’ என்ற திரைப்படத்தின் ரீமேக் தற்போது உருவாகி வருகிறது. பிரபல இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் முத்துராமன் கேரக்டரில் மிர்ச்சி சிவா நடிக்க உள்ளார். லட்சுமி கேரக்டரில் ப்ரியா ஆனந்த் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் கம்ப்யூட்டர் ஹேக்கர் என்ற கேரக்டரில் குக் வித் கோமாளி புகழ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேரக்டர் ஒரிஜினல் படத்தில் இல்லை என்றும் புதிதாக இந்த கேரக்டர் படத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கேரக்டர் புகழுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால் அவரை தேர்வு செய்தார் இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார் 

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.