குட் நியூஸ்!! புதுவை மின் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்!!

புதுச்சேரியில் கடந்த 6 நாட்களாக நடைப்பெற்று வந்த மின் ஊழியர்களின் போராட்டமானது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்க கூடாது என மின்துறை ஊழியர்கள் கடந்த 6 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது.

17 வயது சிறுமிக்கு குவா குவா… போக்சோவில் காதலன் கைது..!!!

இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டனர்.

இதனிடையே முதலமைச்சர் ரங்கசாமி, மின் துறை அமைச்சருடன் இன்று மாலை வரையில் பேச்சுவார்த்தை நடைப்பெற்றதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையின் மின் துறை ஊழியர்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

மீண்டும் சோகம்!! கடன் செயலியால் இளைஞர் தற்கொலை..!!!

இதனை மத்திய அரசிடம் பேசிய மின் துறை ஊழியர்களுக்கு சாதகமான முடிவை கொண்டுவருவதாக தெரிவித்தார். இதன் காரணமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மின் துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment