இன்று காலை காவலர் பயிற்சியின் போது சிறுவன் மீது குண்டு பாய்ந்து படுகாயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரங்கேறியது. அதன்படி புதுக்கோட்டை காவலர் பயிற்சியின்போது துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் வீட்டில் இருந்த சிறுவன் படுகாயமடைந்துள்ளார். நார்த்தாமலை அருகே அம்பாசமுத்திரத்தில் காவலருக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இன்று காலை காவலர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கி கொண்டு ஒன்று அருகில் உள்ள வீட்டில் பாய்ந்தது. துப்பாக்கி குண்டு பாய்ந்து வீட்டிலிருந்த கலைச்செல்வன் என்பவரது மகன் புகழேந்தி படுகாயமடைந்துள்ளார். குண்டு பாய்ந்து காயமடைந்த சிறுவன் புகழேந்திக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். குண்டு பாய்ந்து சிறுவன் காயம் அடைந்து விவகாரம் குறித்து டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடக்கிறது.
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் இத்தகவலை அறிவித்தார். சிறுவன் புகழேந்திக்கு தேவையான மருத்துவ சிகிச்சை தர தஞ்சை அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.