புதுக்கோட்டை துப்பாக்கி சுடும் பயிற்சி மையம்: குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் துப்பாக்கி சூடு பயிற்சி மையத்தில் டிசம்பர் 30-ஆம் தேதி எதிர்பாராதவிதமாக அங்கு இருந்த குடியிருப்பு பகுதியில் வசித்த சிறுவன் மீது குண்டு பாய்ந்தது. அதனால் சிறுவன் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நார்த்தாமலை அருகே அம்பாசமுத்திரத்தில் காவலர் துப்பாக்கி சூடு பயிற்சி மையத்தில் அரங்கேறியது.

சிறுவன் புகழேந்தி  மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குண்டு பாய்ந்த விவகாரம் பற்றி டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது உறவினர்கள் மட்டுமின்றி அங்குள்ளோர் மத்தியில் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் தஞ்சை அரசு மருத்துவமனையை புகழேந்தியின் உறவினர்கள் முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். தொடர் சிகிச்சையில் இருந்தும் பலனின்றி சிறுவன் புகழேந்தி உயிரிழந்துள்ளது சிறுவனின் பெற்றோருக்கு பெரும் துக்கத்தை உருவாக்கியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment