புதுக்கோட்டையில் பரபரப்பு! காளையர்கள் – போலீசார் இடையே தள்ளுமுள்ளு!!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன் கொரோனா பரிசோதனை தடுப்பூசி செலுத்திய சான்றிதழை மருத்துவ முகாமில் சமர்பிக்க குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்வ கோட்டை அடுத்த தச்சங்குறிச்சி பகுதியில் இந்தியாவின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்றைய தினத்தில் தொடங்கி சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.

இதில் காளையர்களுக்கு வழங்கப்பட்ட 2 தடுப்பூசி போட்ட சான்றிதழ்களை மருத்துவ முகாம்களில் சமர்பிக்க மாடுபிடி வீரர்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் மாடுப்பிடி வீரர்களை அப்புறப்படுத்தும் பணிகளில் போலீசார் ஈடுப்பட்டதால் இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதே சமயம் போலீசார் தடியடி நடத்தினர்.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கொரோனா பரிசோதனை, 300 நபர்களுக்கு மட்டுமே அனுமதி போன்ற பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.