புதுக்கோட்டை தேர் விபத்து: காயம் அடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!!

நம் தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே தேர் விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்றைய தினத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் பிரகதாம்பாள் கோயில் திருவிழாவில் தேர் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

குறிப்பாக இந்த தேர் விபத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்த நிலையில் அவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடம் அவர்களை புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை என கூறப்பட்ட நிலையில் தேரின் அடிதளத்தில் பாத்திப்பு ஏற்பட்டு இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலில் கூறப்பட்டு இருந்தது.

தற்போது இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு விபத்து ஏற்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். அதோடு விபத்து ஏற்பட்டது குறித்து ஆய்வு நடத்தி வருவதாகவும் இந்த விபத்தில் தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும், தேர் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுவதாக கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment