Connect with us

விஷம் கொடுத்து பலியான மாணவன்: குழு அமைத்தது புதுச்சேரி அரசு!!

death 3

செய்திகள்

விஷம் கொடுத்து பலியான மாணவன்: குழு அமைத்தது புதுச்சேரி அரசு!!

காரைக்காலில் விஷம் குடித்து மாணவன் உயிரிழந்த சர்ச்சையில் விசாரணை குழு அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் காரைக்காலில் படிப்பு போட்டியின் காரணமாக சிறுவனுக்கு விஷம் கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக நேரு நகர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் வீட்டிற்கு வந்தபோது உடல் சோர்வுடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக மாணவர் பயிலும் வகுப்பை சேர்ந்த சக மாணவியின் தாயார் சகாய ராணி விக்டோரியாயை போலீசார் கைது செய்தனர். இருப்பினும், மருத்துவமனையின் அலட்சியத்தினால் மாணவன் உயிரிழந்திருப்பதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தனர்.

தற்போது மாணவன் உயிரிழந்த சர்ச்சையில் முழு விவரங்களை கண்டறிய, குழந்தைகள் நல தலைமை மருத்துவர் முரளி தலைமையில் 3 பேர் கொண்ட மருத்துவ குழு அமைத்துள்ளதாக, புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top