Connect with us

கேளிக்கைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதி-புதுச்சேரி அரசு

கேளிக்கைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதி-புதுச்சேரி அரசு

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நள்ளிரவு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்தநிலையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து ஒற்றை இலக்கத்தை எட்டியது.
1d39a1a48889a7906523f1644f06b34d pondicherry happiness
இதையொட்டி புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு முழு தளர்வுகளுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதன் காரணமாக புதுவையில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் வந்து குவிந்துள்ளனர். இந்த சூழலில் 2 பேருக்கு உருமாறிய ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து புதுவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பூர்வா கார்க் தலைமையில் புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்வரன், நகராட்சி ஆணையர்கள், சுகாதாரம் மற்றும் சுற்றுலா அதிகாரிகள் கலந்துகொண்டனர். புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் ஆகியவற்றை கண்காணிக்க தனியாக குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
புதுவையில் தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே விடுதிகள், ஓட்டல்களில் அனுமதிக்க வேண்டும். அரசின் அனுமதி பெற்று புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் இடத்திற்கு தகுந்தாற்போல 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்துறை சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும். டிரோன் கேமராக்களை கொண்டு கண்காணிக்க வேண்டும். கொரோனா விதிகளை மீறுபவர்கள் மீது வருவாய், காவல்துறை, நகராட்சி சார்பில் அபராதம் விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதுவை கடற்கரை சாலையில் புத்தாண்டை முன்னிட்டு (அதாவது 31-ந் தேதி) நள்ளிரவு 12.30 மணிக்கு கடற்கரை சாலையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top