அக்டோபர் மாதம் இறுதியில் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.
குறிப்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழையால் பெரும்பாலான பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது. இந்த நிலையில் புதுச்சேரி மாநில அரசு சில நாட்களுக்கு முன்பு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையாக 5 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியுள்ளது.நம் தமிழகத்திலும் எதிர்க்கட்சிகள் பல மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இவ்வாறுள்ள நிலையில் புதுச்சேரி மாநில அரசு அறிவித்த அந்த நிவாரணத் தொகை புதுச்சேரி குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமின்றி மஞ்சள் அட்டை தாரர்களுக்கு பொருந்தும் என்றும் கூறியுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மாநில அரசு கூறியிருந்த 5,000 ரூபாய் நிவாரணத் தொகை அடுத்த வாரம் முதல் அனைத்து நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்யப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.இதனால் புதுச்சேரி மாநில மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.