புதுச்சேரியில் பதற்றம்…. மத்திய துணை ராணுவ படை வருகை..!!!

புதுச்சேரியின் மின் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அங்கு நிலவும் சூழலை சமாளிக்க மத்திய துணை ராணுவ படை வந்தடைந்துள்ளது.

புதுச்சேரி மின் துறை தனியார் மயமாகுவதை கண்டித்து, மின் ஊழியர்கள் இன்று 5-வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மர்ம காய்ச்சல்: 13 வயது சிறுமி உயிரிழப்பு!!

இதன் காரணமாக தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனிடையே அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருப்பதற்காக, குறிப்பாக தற்போது நிலவி வரும் சூழலை சமாளிக்க துணை ராணுவத்தினர் சுமார் 120 பேர் கொண்ட அதிவிரைவு படை காலாபட்டு பகுதிக்கு வந்துள்ளது.

இருளில் மூழ்கிய புதுச்சேரி: மின் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு!!

மேலும், மின் துறை ஊழியர்களால் பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பை தடுப்பதற்காக இவர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.