இருளில் மூழ்கிய புதுச்சேரி: மின் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு!!

புதுச்சேரியில் மின்சாரத்துறையை தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக 2 நாட்களாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பாகூர், வில்லியனூர் மற்றும் தொண்டமாநத்தம் போன்ற பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

வேலூர்!! கட்டுக்கட்டாக ரூ. 14.70 கோடி பணம் கருவூலத்தில் ஒப்படைப்பு!!

இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதே சமயம் பல்வேறு பகுதிகளில் சாலை மறியியல் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த சூழலில் புதுச்சேரி துணைமின் நிலையங்களில் அத்துமீறி நுழைந்து மின்சாரத்தை துண்டித்ததாக மின் ஊழியர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தோனேசியா: கால்பந்தாட்ட கலவரத்தில் 127 பேர் பலி!!

அதே போல் தலைமறைவாக உள்ள மின் துறை ஊழியர்களை தனிப்படை போலீசார் தேடி வருவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.