News
புதுச்சேரி அமைச்சரவை பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு!
நம் இந்தியாவில் சில தினங்களுக்கு முன்பாக 5 மாநில தேர்தல் நடைபெற்றது. அதன்படி தமிழ்நாடு கேரளா புதுச்சேரி அசாம் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது. இதில் பல மாநிலங்களில் புதிய ஆட்சி ,பல மாநிலங்களில் தொடர்ந்து ஆளும் கட்சியின் ஆட்சியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சட்டமன்ற தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. அதில் இவ்விரு கூட்டணியும் வெற்றி பெற்று தற்போது ஆட்சியில் உள்ளது.
ஆயினும் இந்த கூட்டணிக்கு இடையே அவ்வப்போது குழப்பங்களும் முரண்பாடுகளும் தொடர்ந்து நடத்திக் கொண்டே வருகிறது. ஏன் தேர்தலுக்கு முன்னர் வரை இவ்விரு கூட்டணி இருக்குமா நிலவியது. இந்நிலையில் தற்போது அந்த புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலை ஆளுநர் ஆக உள்ளார் பாஜகவை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன். அவர் சில தினங்களாகவே புதுச்சேரி பற்றிய சில தகவல்களை அளித்துக் கொண்டே வருகிறார். அதன்படி தற்போது புதுச்சேரி அமைச்சர்கள் பட்டியல் சில தகவல்களை வெளியிட்டுள்ளார் .
அதன்படி அமைச்சர்கள் ஆனது ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அதன்படி தற்போது இந்திய குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அம்மாநில துணை நிலை ஆளுநர் ஆன தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். மேலும் புதுச்சேரியில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
