இன்று முதல் 4 நாட்களுக்கு தடை… இங்கெல்லாம் வாகனங்களை நிறுத்த கூடாதாம்!

புதுச்சேரியில் இன்று முதல் 16 ஆம் தேதி வரை கடற்கரை திருவிழா நடைபெற உள்ள நிலையில் நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடற்கரை திருவிழா இன்று தொடங்கி 16ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெறுகிறது, பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் கடற்கரை சாலை, பாண்டி மெரினா கடற்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் நடைபெறுகிறது.

பொதுமக்கள் அதிகளவில் கடற்கரைகளுக்கு வருவார்கள் என்பதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நகரப் பகுதியில் உள்ள செயின்ட் லூயிஸ் வீதி, துமாஸ் வீதி மற்றும் Promonade ஹோட்டல் அருகே வாகனங்களை தடை விதிக்கப்பட்டுள்ளது.

புஸ்சி வீதியிலும் பழைய சட்டக்கல்லூரி சந்திப்பிலிருந்து கடற்கரை சாலை வரை வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடற்கரை திருவிழாவில் கலந்துகொள்ள வரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை பழைய துறைமுகம் பகுதியில் மட்டுமே நிறுத்த வேண்டும் என போக்குவரத்து காவல்துறை கண்காணிப்பாளர் மாறன் உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment