புதுக்கோட்ட மாவட்டம் பசுமலைப்பட்டி அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. இங்கு மாநில மற்றும் மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு இங்கு அருகில் இருந்த புகழேந்தி என்ற சிறுவன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சற்றுமுன் உயிரிழந்தான்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் சிறுவனின் மரணத்துக்கு நீதி கேட்டு திருச்சி காரைக்குடி சாலையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
துப்பாக்கி சுடும் தளத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சிறுவனின் உடலை வாங்க மறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
#LIVE | துப்பாக்கி குண்டு பாய்ந்து சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழப்பு https://t.co/soX3AVNeeZ
— Sun News (@sunnewstamil) January 3, 2022