வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு:700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!!

தமிழர்களின் வீர விளையாட்டில் ஒன்றாக காணப்படுகிறது ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு போட்டியானது பொங்கல் தினத்தை முன்னிட்டு நடைபெறும். அதன்படி பாலமேடு, அலங்காநல்லூர், திருமயம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் சீரும் சிறப்புமாக நடைபெற்று முடிந்தது.

இதில் நேற்றைய தினம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் அருகே உள்ள வடமலாப்பூரில் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மெய்யநாதன், எம்எல்ஏ முத்துராஜா, திமுக மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

வடமலாப்பூர் பிடாரி அம்மன் மற்றும் கருப்பர் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியானது விருவிருப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 700 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.